cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Naushin_Binth_Sha

அல்குர்ஆன் அஸ் ஸுன்னாஹ் ஒளியில் உங்களுக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

إظهار المزيد
مشاركات الإعلانات
1 012
المشتركون
+124 ساعات
+177 أيام
+5130 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ وَسَآءَتْ مَصِيْرًا‏ எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 4:115)
إظهار الكل...
👍 3
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று.?! என்று கூடக் கேட்பார்கள். ஸஹீஹ் புகாரி : 6129.
إظهار الكل...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : தம் இறைவனிடமே திரும்பிச் செல்ல விருக்கிறோம் என்று அவர்களின் உள்ளங்கள் அஞ்சிய நிலையில் என்ற (23:60) என்ற வசனம் தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். இவர்கள் மது அருந்துவோராகவும் திருடுபவர்களாகவும் உள்ளவர்களா.?! என்று கேட்டேன். சித்தீக்கின் மகளே! இல்லை. அவர்கள் நோன்பு நோற்பார்கள்; தொழுவார்கள்; தர்மம் செய்வார்கள்; (தமது நல்லறங்கள்) ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடுமோ என்று அஞ்சுவார்கள். இவர்களே நன்மையான காரியங்களில் விரையக் கூடியவர்கள். இவர்களே அதற்கு முந்தக் கூடியவர்கள் (என்ற 23:61 வசனத்தை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் (ரலி) நூல்கள் : திர்மிதீ (3099)
إظهار الكل...
Photo unavailableShow in Telegram
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே! என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான் என்று சொல். ஏனெனில், (இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்பதைச் சுட்டும்) லவ் எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5178.
إظهار الكل...
1
Repost from Naushin_Binth_Sha
Photo unavailableShow in Telegram
உங்கள் மேலான துஆவில் என்னுடைய தம்பியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் இவனது சோதனையை லேசாக்கி கொடுக்க துஆ செய்யுங்கள்! இன்ஷாஅல்லாஹ். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்! என்று கூறுகிறார். இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா (ரலி) அவர்களின் மனைவி) உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5280. விரைவாக பதிலளிக்கப்பட்ட துஆ என்பது எதுவென்றால் வேறு நபருக்கு நாம் இரகசியமாக கேட்ட துஆ ஆகும். - இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்).
إظهار الكل...
நபிமொழி 📌✨ ﺇِﻳَّﺎﻛُﻢْ ﻭَﺍﻟﻈَّﻦَّ، ﻓَﺈِﻥَّ ﺍﻟﻈَّﻦَّ ﺃَﻛْﺬَﺏُ ﺍﻟْﺤَﺪِﻳﺚِ، ﻭَﻻَ ﺗَﺠَﺴَّﺴُﻮﺍ، ﻭَﻻَ ﺗَﺤَﺴَّﺴُﻮﺍ، ﻭَﻻَ ﺗَﺒَﺎﻏَﻀُﻮﺍ، ﻭَﻛُﻮﻧُﻮﺍ ﺇِﺧْﻮَﺍﻧًﺎ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள். நூல் : ஸஹீஹ் புகாரி 5143
إظهار الكل...
👍 1
Photo unavailableShow in Telegram
இறைவேதம் 📌 ✨ وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَيْكَ ‌ قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ‌ وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ‌ فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ ‌‏ இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம் (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன். ஆனால், என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன் என்று கூறினான். (அல்குர்ஆன் 7:156)
إظهار الكل...
3
இறைவேதம் 📌✨ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான். அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது. எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:21)
إظهار الكل...
👍 3
இஜ்மா ஓர் அறிமுகம்! இஜ்மா என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியமான ஓர் அம்சமாகும். அல்குர்ஆன், சுன்னாவிற்கு அடுத்து மூன்றாவது ஆதாரமாக இது குறிப்பிடப்படும். இஜ்மாவை குறித்த சில முக்கியமான தகவல்களை நாம் அறிந்திருப்பது அவசியமாக இருப்பதினால், அதுபற்றிய விபரங்களை இனி பார்ப்போம், 1 - இஜ்மாவின் வரைவிலக்கணம், اتفاق جميع العلماء المجتهدين من أمة محمد صلى الله عليه وسلم بعد وفاته في أي عصر من العصور على أمر من امور الدين. மார்க்க அம்சங்களில் ஏதேனும் ஒன்றின் மீது, நபி ஸல் அவர்களின் மரணத்திற்கு பிறகு, ஏதேனும் ஒரு காலத்தில், அவர்களின் உம்மத்தில் இருந்து முஜ்தஹித் அறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு பெயரே இஜ்மா ஆகும். 2 - இஜ்மாவிற்கான ஆதாரம், ஆதாரம் (1) وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ وَسَآءَتْ مَصِيْرًا‏ இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம், (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம், அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் : 4:115) இந்த வசனத்தில் (سبيل المؤمنين) முஃமின்கள் என்று பன்மையாக குறிப்பிட்டு, அவர்களின் பாதையை பின்பற்றாமல் முரண்பட்டு செல்பவர்களின் பாதை, நரகத்திற்கு கொண்டு செல்லும் தவறான பாதையாகும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே முஃமின்கள் எந்த விஷயங்களில் (இஜ்மா) ஒன்றுபடுகின்றார்களோ, அதனை கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. ஆதாரம் (2) يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏ விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், (அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலைவர்களுக்கும்) கீழ்ப்படியுங்கள், ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள், (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அல்குர்ஆன் : 4:59) இந்த வசனத்தில் அல்லாஹ், ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், அதனை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் திருப்பி விடுங்கள் என்கிறான். இதற்கு மாற்றமாக கருத்து வேறுபாடு கொள்ளாமல், அனைவரும் ஒன்றிணைந்து விட்டால், அதனை ஆதாரமாக கொள்ள வேண்டும் என்பதை இந்த வானத்திலிருந்து அறியலாம். ஆதாரம் (3) عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ اللَّهَ لَا يَجْمَعُ أُمَّتِي عَلَى ضَلَالَةٍ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக அல்லாஹ், எனது உம்மத்தை வழிகேட்டில் ஒன்றிணைக்க மாட்டான். (நூல்: திர்மிதி 2167 ஹசன்) இந்த உம்மத்திலுள்ள அறிஞர்கள் அனைவரும், ஒரு விஷயத்தில் ஒன்றுபடுகிறார் எனில், அந்த விஷயம் சத்தியமானதாக தான் இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக அசத்தியத்தின் மீது, அவர்கள் அனைவரும் ஒன்றுபடுவது சாத்தியமற்றதாகும். ஏனெனில், அல்லாஹ் இந்த உம்மத்தை சிறந்த சமுதாயமாக ஆக்கி உள்ளான். அத்தகைய சிறப்பை பெற்ற அனைவரும், அசத்தியத்தின் மீது ஒன்றிணைவது சாத்தியமற்றதாகும். ஆதாரம் (4) இஸ்லாமிய துறை சார்ந்த நூல்கள் அனைத்திலும், அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் இஜ்மாவை, ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் மன்ஹஜ் ஸலஃப்பில், இஜ்மாவுஸ் ஸஹாபா பிரதான ஆதாரமாக இருக்கிறது. ஆதாரம் (5) மார்க்கத்தில் அவசியமாக அறியப்பட வேண்டிய அம்சங்களை குறித்த உறுதியான ஆதாரங்களை கொண்ட (قطعي) இஜ்மாவை, மறுப்பவர்களை, காஃபிர்கள் என அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். மேலே குறிப்பிட்ட ஆதாரங்களிலிருந்து இஜ்மாவின் முக்கியத்துவத்தை அறியலாம். 3 - இஜ்மாவை ஆதாரமாக ஏன் ஏற்க வேண்டும்? அல்குர்ஆன், சுன்னாவிலிருந்து தான் மார்க்க ஆதாரங்களை எடுக்க வேண்டும் என்றிருக்கும் போது, இஜ்மாவை ஆதாரமாக ஆக்க வேண்டிய அவசியமென்ன? என்ற கேள்விக்கு, இரண்டு முக்கியமான காரணங்களை குறிப்பிடலாம்.
إظهار الكل...
முதலாவது: மார்க்க ஆதாரங்கள் அனைத்தையும் எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாது. எனவே இதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட ஓர் அம்சத்தின் மீது இஜ்மா உள்ளது என்று கூறப்பட்டால், அதில் தீர்க்கமான முடிவிற்கு அனைவரும் வந்து விட வேண்டும். இரண்டாவது: குறிப்பிட்ட ஓர் அம்சத்தின் மீது இஜ்மா உள்ளது என்று நிருபிக்கப்பட்டு விட்டால், அதில் முரண்படுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. ஏனெனில் குறிப்பிட்ட அந்த விஷயத்தில், பின்வரக் கூடியவர்கள் முரண்படுவதற்கு அனுமதி உண்டென்றால், முன்சென்றவர்கள் ஏகமனதான ஒரு முடிவுக்கு வந்தே இருக்க மாட்டார்கள். உதாரணமாக அல்லாஹ், கணவனை இழந்த பெண்களுக்கான இத்தாவின் காலம் நான்கு மாதங்கள் மற்றும் பத்து நாட்கள் என்கிறான். பார்க்க அல்குர்ஆன் (2:234) கணவனை இழந்த பெண், இளமையாக இருந்தாலும் சரியே! முதுமையை அடைந்திருந்தாலும் சரியே! கர்ப்பிணிகளை தவிர மற்ற அனைவருக்குமான இத்தா காலம் 4 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் ஆகும். இதில் இஜ்மா உள்ளது. ஒருவர் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில், கணவனை இழந்த பெண் முதுமையை அடைந்து விட்டால், அவர்களின் இத்தா காலம் 3 மாதங்கள் தான் என்று தீர்ப்பளிக்கிறார். அதற்கு ஆதாரமாக (65:4) வசனத்தை காட்டுகிறார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக, கணவனை இழந்த பெண் முதுமையை அடைந்தால், அவருக்கும் 4 மாதங்களும், 10 நாட்கள் தான் இத்தா என்பதில் இஜ்மா உள்ளது என்பதை தான் ஆதாரமாக காட்டப்படும். மேலும் இஜ்மாவிற்கு முரண்படக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்யப்படும். ஆக எந்தந்த விஷயங்களில், இஜ்மா ஏற்பட்டுள்ளது என்பது நிருபிக்கப்படுமோ, அத்தகைய அம்சங்களில், அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதற்கு முரண்படக் கூடாது என்பதே இஜ்மாவின் பிரதான அம்சமாகும். 4 - இஜ்மாவை மறுத்தவர்கள், அஹ்லுஸ் ஸுன்னாவை சேர்ந்த அறிஞர்கள் அனைவரும், இஜ்மாவை முக்கியமான ஓர் ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களில், எந்த ஒருவரும் இஜ்மாவை நிராகரிக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றில், கவாரிஜ்கள், ராபிழாக்கள், முஅதஜிலாக்கள் போன்ற வழிதவறிய கூட்டத்தினர் தான், அடிப்படையில் இஜ்மா என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும், அது நிகழ்வதற்கான வாய்ப்பும் இல்லை என்றும், அதனுடைய அசலையே மறுத்துள்ளார்கள். எனவே இஜ்மா என்ற அசலையே ஒருவர் மறுப்பது, வழிதவறி சென்றவர்களின் நிலைபாட்டை சரிகாண்பது போல் ஆகும். மார்க்கத்தில், இந்தளவு முக்கியத்துவம் அளிக்கப்பட இஜ்மாவை, அஹ்லுஸ் ஸுன்னா வழியில் ஆதாரமாக கொண்டு, நேர்வழியில் பயணிப்போம்! அல்லாஹ் அருள்புரிவானாக! ஹசன் அலீ உமரி 17.9.2024
إظهار الكل...
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.